ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு

பூதப்பாண்டி அருகே பழையாற்றில் குளிக்க சென்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-28 19:08 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே பழையாற்றில் குளிக்க சென்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

என்ஜினீயர்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்திலிங்கம். இவருடைய மகன் மதுசூதன பெருமாள் (வயது 24). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்துக்கு வந்தார்.

ஆற்றில் மூழ்கி சாவு

நேற்று மாலையில் தெரிசனங்கோப்பு அருகே உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் மதுசூதன பெருமாள் உடல் கரையோரம் ஒதுங்கியது. அந்த சமயம் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் பார்த்து, பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அப்போது மதுசூதன பெருமாளுக்கு நீச்சல் தெரியாது என்றும், அவர் ஆற்றில் குளித்த போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்ததும் தெரிய வந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்