மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தல்

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2022-08-28 00:45 IST

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளையின் 7-வது மாவட்ட மாநாடு துறைமங்கலத்தில நடந்தது. மாநாட்டிற்கு அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில துணைத் தலைவர் பஷீர் தொடக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் திருத்துவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத உயர்வு வழங்கிட வேண்டும். 1.4.2003-க்கு பின் மின்வாரிய பணியில் சேர்ந்து ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்திட வேண்டும். மின்வாரிய உத்தரவு எண் 2-ஐ திரும்பப்பெற வேண்டும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 19, 20-ந் தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் அமைப்பினர் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்