சமையலர்களாக சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்காலிக நியமனம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையலர்களாக சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்காலிக நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-09 19:21 GMT


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையலர்களாக சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்காலிக நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை உணவு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி பகுதியில் அனைத்து பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்துவது தொடர்பாக அரசு வழிகாட்டுதல் செயல்முறைகளின் படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவி குழு உறுப்பினர்கள் சமையலர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில் சமையலர் சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு அதே பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தாயாரான வேறு நபர் பணியமர்த்தப்படுவார்.

தற்காலிக நியமனம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுய உதவிக்குழுக்கள் ஊராட்சி அளவிலான கட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள், அதே கிராம பஞ்சாயத்தில் நகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தகுதி அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவர். பணிக்கு சமையலராக தேர்வு செய்யும் போது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்