பிடாரியம்மன் கோவில் குடமுழுக்கு

பிடாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-07-09 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகே தொண்டியக்காடு கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன்- சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். யாக சாலை பூஜையின் முடிவில் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் புதுக்குடி, முனங்காடு, தில்லைவளாகம், இடும்பாவனம், மேலவாடியக்காடு, கீழவாடியகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்