டாஸ்மாக் கடை 'திடீர்' மூடல்

காட்பாடியில் டாஸ்மாக் கடை திடீரென மூடப்பட்டது.

Update: 2023-09-01 17:29 GMT

காட்பாடி வள்ளிமலை கூட்டு ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடைக்கு எதிரிலேயே இரண்டு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் கடைக்கு அருகில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதனால் வள்ளிமலை கூட்ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு டாஸ்மாக் கடை திடீரென மூடப்பட்டது. அப்போது அங்கு இருந்த குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இந்த கடை வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்