டாஸ்மாக் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்

டாஸ்மாக் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்

Update: 2023-09-05 19:00 GMT

கோவை

தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் 68 பேருக்கு ரூ.37 கோடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு கடன் தொகையை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மருதமலையில் வாகன நிறுத்துமிடம்

கோவை மாநகரில் உள்ள போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதமலை கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்.

பீக் ஹவர் மின்கட்டணம் தொடர்பான பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடைகளில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்ப டும்.

பா.ஜ.க. சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண் டிருந்தால், மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இதுகுறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் வருகை

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24 -ந் தேதி திருப்பூர் வருகிறார். கோவைக்கு அவர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்