தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

Update: 2022-05-22 20:35 GMT

தஞ்சாவூர்:

தஞ்சை 20 கண்பாலம் அருகே நடைபெறும் புது ஆறு மறுசீரமைப்பு பணிகளை தண்ணீர் திறப்பதற்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் அறிவுறுத்தினார்.

மறுசீரமைப்பு பணிகள்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து தொடங்கி கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இந்த ஆறு மூலம் 2½ லட்சம் ஏக்கர் வரை நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆறில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொளப்பட்டு வருகிறது.

மறுசீரமைத்தல் பணிகள் கல்லணை தலைப்பில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க வேண்டும்

தஞ்சையை பூக்காரத்தெரு 20 கண்பாலம் அருகே நடைபெறும் சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது பணிகளை தரமாகவும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு என்ஜினீயர்களுக்கு, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் அறுவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பாண்டி, உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், உதவி பொறியாளர்கள் சுரேந்திரமோகன், விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்