வீரராகவ பெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வீரராகவ பெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்தனர்.

Update: 2023-01-22 10:57 GMT

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு தை மற்றும் சித்திரை ஆகிய இரு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த கோவிலில் தை பிரம்மோற்சவம் விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை அமாவாசையன்று பக்தர்கள் இங்கு வந்து வீரராகவ பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வந்தனர். பின்னர் வீரராகவ பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிதார். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்