கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ளதிருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ளதிருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தென்தாமரைகுளம்:
கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி குமரி முனை திருக்குறள் திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ் அறிஞர் செந்தூர் பாரி சுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்றனர். அங்கு திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி மரியாதை ெசய்தனர். இதில் தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.