தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Update: 2023-02-01 18:45 GMT

நாகையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

புகைப்பட கண்காட்சி

நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தார். தமிழக மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஓயாஉழைப்பின் ஓராண்டு- கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 10 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழக அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்தவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

அரசின் திட்டங்களை தெரிந்துகொள்ள...

பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சி அமையும். பின் தங்கிய மாவட்டமாக இருந்த நம் மாவட்டமானது தமிழக முதல்-அமைச்சரின் நல்லாட்சியில் கடந்த 1½ ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரத்திவிராஜ், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், நகரமன்றதலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்