தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-07-19 15:54 GMT

தொண்டி

திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8-வது தாலுகா மாநாடு தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை துணைச் செயலாளர் போஸ் ஏற்றி வைத்தார். மாநில துணைத் தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் திருவாடானை தாலுகா விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைப்பதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டுகுடி, சிறுகம்பையூர், அஞ்சுகோட்டை, திருத்தேர்வளை உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக ரசீது வழங்க வேண்டும், பட்டா சிட்டா தேவைப்படும் விவசாயிகளுக்கு தாசில்தார் மூலம் உரிய விசாரணை நடத்தி இதில் யாரும் விடுபடாமல் உரிய நபர்களுக்கு பட்டா சிட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திருவாடானை தாலுகா விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் சேதுராமு, சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்தனம், விவசாயிகள் சங்க துணைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்