தமிழ்நாடு தின விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் தமிழ்நாடு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-07-18 22:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் யாதவ கிருஷ்ணன், வேலுசாமி, அர்ஜூனன் மற்றும் மோட்ச அலங்கார மேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், தமிழன் என்ற அடையாளத்துடன் மட்டுமே மாணவர்கள் வலம் வர வேண்டும். சாதி, மத அடையாளம் இல்லாத சமூகத்தை, தமிழகத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தை புரிந்து அனைவரும் தமிழன் என்ற ஒரே அணியில் நிற்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உறுதுணை புரிய வேண்டும் என்றனர். கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காமராஜர் சதுக்கத்தை சென்றடைந்தது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டின் பெருமைகளையும், தமிழின் பெருமைகளையும் கோஷங்களாக எழுப்பியவாறு சென்றனர். இதில் 500 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்