அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 1,537 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) மருத்துவத்துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நடப்பு பட்ஜெட்டில் (2024-25) மருத்துவத்துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
நான் முதல்வன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் 120 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்
விருதுநகர் மற்றும் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்
மதுரையில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்
மாணவ, மாணவியருக்கு ரூ. 1000 உதவித்தொகை
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட நடப்பு பட்ஜெட்டில் கூடுதலாக 1,245 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) உயர்கல்வித்துறைக்கு 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நடப்பு பட்ஜெட்டில் (2024-25) உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 3 ஆயிரத்து 743 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் (2023-2024) பள்ளிக்கல்விக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நடப்பு பட்ஜெட்டில் (2024-2025) பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் 1,100 கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 2.2 சதவீத மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி எடுத்துள்ளது.