25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஞானசேகரன் தான் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பதை பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் வீடியோ கால் மூலம் உறுதி செய்துள்ளனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - 46 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.