தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம்
தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, திருவள்ளுவர் ஞான மன்றம் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.