பள்ளிபாளையத்தில் கிணற்றில் குதித்து விசைத்தறி தொழிலாளி தற்கொலை

பள்ளிபாளையத்தில் கிணற்றில் குதித்து விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Update: 2022-09-26 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் கிணற்றில் குறித்து விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விசைத்தறி தொழிலாளி

பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சந்திரன் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு, வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சந்திரன் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இருந்த கிணற்று பகுதிக்கு சென்றார். இதையடுத்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்ற தந்தை திரும்ப வராததால் அதிர்ச்சி அடைந்த மகன்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் சந்திரன் கிணற்று பகுதிக்கு சென்றதை அறிந்த அவர்கள் இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடினர்.

விசாரணை

இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கிணற்றில் இருந்து சந்திரன் உடலை மீட்டு மேலே கொண்டனர். தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்