தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-09-10 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள அதகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன். இவருடைய மகன் முருகன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முருகன் பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தனது மனைவியிடம் அடிக்கடி கூறி வந்தாராம்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்