தனிப்பிரிவு போலீசார் திடீர் இடமாற்றம்
தனிப்பிரிவு போலீசார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட தனிப்பிரிவில் மணப்பாறை உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் திருவெறும்பூர் உட்கோட்டத்துக்கும், சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலர் முத்துக்குமார் கொள்ளிடம் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய பி.சத்தியமூர்த்தி சிறுகனூருக்கும், புத்தாநத்தம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் சுரேஷ்குமார் வளநாடு போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த போலீஸ்காரர் அழகேஸ்வரன் புத்தாநத்தத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.