போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 10 பேர் திடீர் இடமாற்றம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 10 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகரில் பணியாற்றி வந்த 10 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை நேற்று திடீரென இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய முனீஸ்வரன் (கோட்டை) ஸ்ரீரங்கத்துக்கும், ராஜ்மோகன் (அரியமங்கலம்), மகேந்திரன் (கண்டோன்மெண்ட்), அறிவழகன் (பாலக்கரை), ஆனந்தசெல்வம் (உறையூர்) ஆகியோர் ஆயுதப்படைக்கும், ஆயுதப்படையில் பணியாற்றிய பாண்டியன் கண்டோன்மெண்டுக்கும், முத்து அருணகிரி உறையூருக்கும், ஸ்ரீனிவாசன் அரியமங்கலத்துக்கும், அண்ணாத்துரை பாலக்கரைக்கும், ஸ்ரீநிவாசன் கோட்டை போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.