ஓடும் காரில் திடீர் தீ
வந்தவாசியில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மீனவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47), மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், காரில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கூட்டுச்சாலை அருகே காஞ்சீபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரில் தீப்பற்றி எரிந்தது. உடனே ரமேஷ் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.