காய்கறிகள் சாகுபடி செய்ய மானியம்

சின்னசேலம் ஒன்றியத்தில் காய்கறிகள் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்

Update: 2022-09-09 17:20 GMT

சின்னசேலம்

சின்னசேலம் ஒன்றிய தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுண்ணீர் பாசன திட்டம்

சின்னசேலம் ஒன்றியத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 720 ஹெக்டர் பரப்பு இலக்கீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆகியவற்றுடன் சின்னசேலம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://thhorticulture.tn.gov.in:8080 என்ற இணையத்தளத்தில் பதிவு செய்தும் விவசாயிகள் பயன்பெறலாம்.

மேலும் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான இலக்கின்படி காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் கத்திரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் 51 ஹெக்டர் பரப்புக்கும், துல்லிய பண்ணையத்திட்டத்தில் 42 ஹெக்டர் பரப்புக்கும், சின்னவெங்காயம் 100 ஹெக்டர் பரப்புக்கும் நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

வேளாண்மை வளர்ச்சி திட்டம்

இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நைனார்பாளையம், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், கருங்குழி, பெத்தானூர், திம்மாபுரம், பாண்டியன்குப்பம், மூங்கில்பாடி, வாசுதேவனுர், அம்மகளத்தூர், காரனூர், மேல்நாரியப்பனூர், மட்டிகைகுறிச்சி, சடையப்பட்டு, பங்காரம், பைத்தந்துரை, ராயர்பாளையம் ஆகிய பாஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற http://thhorticulture.tn.gov.in/tn hortnet என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு சின்னசேலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்