மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-11-07 18:45 GMT

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவி தொகை

நடப்பு நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்க தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஓர் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ. ஆயிரம், 6 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.6 ஆயிரம், முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.7 ஆயிரம் ஓராண்டிற்கு கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவி தொகையாக ஆண்டு ஒன்றுக்கு 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், இளங்கலைபட்டப்படிப்பிற்கு ரூ.5 ஆயிரம், முதுகலை பட்டபடிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டும்

2021-22 நிதியாண்டு திட்டத்தின் கீழ் பயனடைய அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தொலைதூர கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எனவே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், மாணவர் பிறதுறைகளில் கல்வி உதவி தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ், கடந்த ஆண்டு மதிப்பெண் சான்றுநகல் (9-ம் வகுப்புக்குமேல்) அளிக்கப்படவேண்டும். இந்த விண்ணப்பங்கள் நவம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்