அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவிகள் அவதி

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக வசதிகள் இல்லாமல் மாணவிகள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

Update: 2022-07-05 20:09 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக வசதிகள் இல்லாமல் மாணவிகள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

வகுப்பறைகள்

திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1949-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கிழவனேரி, அச்சம்பட்டி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சுமார் 1,700 க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

ஆனால் வகுப்பறை கட்டிடங்கள் போதிய அளவில் இல்லை. தற்போது ரூ.60 லட்சம் தனியார் நிதி உதவியுடன் இரண்டு வகுப்பறை கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 9 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. மாணவிகள் வகுப்பறை வசதி இன்றி மரத்தடியில் படித்து வருகின்றனர். இது தவிர 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.

நூலக வசதி இல்லை

தற்போது வகுப்பறை தேவைப்படுவதால் அனைத்து புத்தகங்களும் பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பள்ளிக்கு என தனியாக நூலக வசதி இல்லை. அத்துடன் குடிநீர் வசதியும் இன்றி கடுமையாக சிரமப்பட்டு வருகின்றன.

கல்வியில் சிறந்து விளங்கும் இந்த பள்ளிக்கு தனியார் நிறுவனங்கள் நிதி உதவி செய்து தேவையான உபகரணங்கள், வகுப்பறை கட்டிட வசதி செய்ய முன்வர வேண்டும் என ஆசிரியர்களும், பள்ளி மாணவிகளும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்