மாணவி பிரியா மரணம் வழக்கு: மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-19 02:59 GMT

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர்.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என தெரிவித்த பெரவள்ளூர் போலீசார் மருத்துவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில், வழக்கில் தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்