விஜயதசமி மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ‘அ’ என்ற தமிழ் எழுத்து எழுத பழகி கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-05 18:17 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்து 'அ' என்ற தமிழ் எழுத்து எழுத பழகி கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமி

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை பெறுவார்கள் என்று ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் முதல் வாரம் பள்ளியில் சேரும் வயதை அடைந்து இருந்தாலும் பெற்றோர்கள் விஜயதசமி அன்று பள்ளியில் சேர்ப்பதையே இன்றளவும் விரும்பி வருகின்றனர்.

இதன்படி நேற்று விஜயதசமி அன்று ராமநாதபுரம் மாவட் டத்தில் விஜயதசமி தினத்தையொட்டி பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

நெல்மணி

இதற்காக பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து புதிதாக பள்ளியில் சேர வந்த குழந்தைகளை வாழைஇழையில் பரப்பப்பட்டிருந்த நெல்மணி மற்றும் அரிசியில் குழந்தைகளின் கைவிரலை பிடித்து தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை எழுத பழகிக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் ரமேசுவரி, விஜயகுமாரி ஆகியோர் தலைமையில் வித்யாரம் பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

புத்தகம்,சீருடை

அரசு பள்ளியில் சேர்ந்தவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று விஜயதசமி நாளன்று மாவட்டம் முழுவதும் ஏராளமான குழந்தைகள் தங்களின் பள்ளி கல்வி வாழ்க்கையை தொடங்கினர். குறிப்பாக அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் ஏராளமானோர் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் சேரும் ஆவலில் குழந்தைகள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து வந்ததை காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்