மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மன அழுத்தத்தை கொடுக்காதீர்கள்

அதிக மதிப்பெண்பெற மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மன அழுத்தத்தை கொடுக்காதீர்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Update: 2022-08-18 16:35 GMT

சாயல்குடி, 

அதிக மதிப்பெண்பெற மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மன அழுத்தத்தை கொடுக்காதீர்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

ஆய்வு

சாயல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் மற்றும் கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் அங்கன்வாடி மையங்களை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- அதிக மதிப்பெண் பெற மாணவர் களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தத்தை கொடுக்காதீர்கள். அனைத்து மாணவர்களும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அனைத்து மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற முடியாது.

மாணவர்கள் தற்கொலை முயற்சியில் இருந்து பாதுகாக்க தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் மூலமாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 500 அங்கன் வாடிகளுக்கு புதிய கட்டிடங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது.

காலிப்பணியிடம்

விரைவில் பணிகள் தொடங்கப்படும். அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் இவ்வாறு அவர் கூறினார்.கீழக்கன்னிசேரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப ்பள்ளியின் சத்துணவுக்கூடம் பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து சத்துணவு கூடத்தில் சமைத்த உணவை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எல்.எல்.ஏ. ஆகியோர் மாணவ மாணவியருக்கு பரிமாறினார். தொடர்ந்து விளங்களத்தூர் கிராமத்தில் உள்ள அவார்ட் டிரஸ்ட் பசுமை குடில் குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில் அமைச்சர் பார்வையிட்டார்.

மரக்கன்று

மேலும் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் வசதிகள் குறித்து கேட்டிருந்தார். அங்கு மரக் கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் காளிமுத்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், குலாம் முகைதீன், ஆப்பனூர் ஆறுமுகவேல், மாயகிருஷ்ணன், சண்முகநாதன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்கடேஷ்ராஜ், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்செழியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியேந்திரன், நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி விவசாய சங்க தலைவர் ராஜாராம், ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, லிங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பூபதிமணி, கோவிந்தராஜ், ஒன்றிய பொறுப்பாளர் கடலாடி ஆறுமுகவேல், முதுகுளத்தூர் நகர் செயலாளர் ஷாஜகான் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்