டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையடைப்பு போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையடைப்பு போராட்டம்;

Update: 2023-09-04 18:45 GMT

வேதாரண்யம் தாலுகா சாலக்கடையில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதையடுத்து தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 மாதத்தில் இந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால் 4 மாதமாகியும் கடை இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடையை அகற்றக்கோரி கடை முன்பு அமர்ந்து கடந்த 2 நாட்கள் முற்றுைக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் 2 நாட்களுக்கு கடையை திறப்பதில்லை என்றும், விரைவில் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று மீண்டும் கடையை திறப்பதற்கு டாஸ்மாக் உதவி மேலாளர் ஜெயபாலன் மற்றும் பணியாளர்கள் வந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குவந்து கடையை அகற்றக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. வருகிற 8-ந்தேதி டாஸ்மாக் கடையை திறப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்