ராணிப்பேட்டை: லாரி-பைக் மோதி விபத்து... கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 2 பேர் பலி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருவர் பைக்கில் கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2025-03-24 13:37 IST
ராணிப்பேட்டை: லாரி-பைக் மோதி விபத்து...  கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பக்தர்கள் இரண்டு பேர் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க பைக்கில் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி உரசியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

பின்னர் அதே சாலையில் வந்த கார் ஒன்று இருவர் மீது ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைதனர். அங்கு இறந்து கிடந்தவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பைக்கில் சென்ற பக்தர்கள் இரண்டு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்