சிலம்பாட்ட பட்டய கல்வி வகுப்புகள் தொடக்கம்

சிலம்பாட்ட பட்டய கல்வி வகுப்புகள் தொடக்கம்

Update: 2022-11-19 19:59 GMT

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிலம்பாட்ட பட்டய கல்வி வகுப்பினை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிலம்பாட்டப் பட்டயக் கல்வி வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலைப்புல துறை தலைவர் இளையாப்பிள்ளை வரவேற்றார். இதனை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிலம்பாட்டக் கலைக்குப் புத்துயிர் ஊட்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இங்கு சேர்க்கை பெற்ற மாணவர்கள் தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல், வட மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

இட ஒதுக்கீடு பெற சான்றிதழ்

சேர்க்கை பெற்றவர்கள் அனைவரும் வகுப்பில் குறிப்புகள் எடுப்பது, வருகைப் பதிவை உறுதி செய்வது, நேர மேலாண்மையைப் பின்பற்றுவது போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கான பட்டியலில் சிலம்பாட்டம் இடம்பெறும். அப்போட்டியில் வெற்றி பெறுவோர் அரசின் விளையாட்டுத் துறை இடஒதுக்கீடு பெறும் வகையில் சான்றிதழ்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். சிலம்பாட்ட பட்டய வகுப்பினை துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் தொகுத்து வழங்கினார். முடிவாக மாணவர் நலன் இயக்குனர் சீமான் இளையராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்