தொழிலாளியை கத்தியால் குத்திய மர்ம கும்பல்

தொழிலாளியை மர்மகும்பல் கத்தியால் குத்தியது.

Update: 2023-02-26 18:45 GMT

ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது இப்ராகிம் (வயது 42). இவர் ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த சிலர் தொழிலாளியான கைகொள்வார் தெருவை சேர்ந்த சுரேஷ் (31) என்பவரிடம் 10 பாக்கெட் சால்னா கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் கேட்டதற்கு தரமறுத்ததுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு, உணவு பொருட்களை கீழே கொட்டிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முகம்மது இப்ராகிம் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்.எஸ்.மடை செந்தில், கார்த்திக் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்