எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.86 சதவீதம் தேர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவில் 93.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவில் 93.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
93.86 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 8 ஆயிரத்து 11 மாணவர்களும், 8 ஆயிரத்து 287 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 298 பேர் எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகளின்படி 7 ஆயிரத்து 292 மாணவர்களும், 8 ஆயிரத்து 5 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக ராமநாதபுரம் மாவட்ட அளவில் 93.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 12-வது இடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன, 75 மெட்ரிக் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ்-1 தேர்வு
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை 6 ஆயிரத்து 548 மாணவர்களும், 7 ஆயிரத்து 393 மாணவிகளுமாக மொத்தம் 13 ஆயிரத்து 941 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி 5 ஆயிரத்து 869 மாணவர்களும், 7 ஆயிரத்து 134 மாணவிகளுமாக மொத்தம் 13 ஆயிரத்து 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாவட்ட அளவில் 93.27 சதவீதம் ஆகும்.