விடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலையில் விடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

Update: 2023-10-26 18:45 GMT

திருவண்ணாமலை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை பொது மேலாளர் சுஜாதா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை விளையாட்டு நல அலுவலர் பாலமுருகன், விடுதி மேலாளர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலையை சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்