நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவராத்திரி திருவிழா 2-வது நாளில் தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு, உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில், கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொலு வழிபாடு நடைபெற்றது.