சிறப்பு பயிற்சி முகாம்

மகளிர் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2023-09-24 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தண்ணீரின் தரம் குறித்து மகளிர் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜானகி, அன்பு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு குழநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளில் இருந்து மகளிர் குழுவினர் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு நீரின் தரத்தை பரிசோதிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை நீர் பகுப்பாய்வளார் உதயசூர்யா விளக்கி கூறினார். முடிவில். தண்ணீர் திறன் மற்றும் தரம் பரிசோதிப்பது குறித்த கையேடுகள் மற்றும் பரிசோதனை பெட்டகம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்