மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு கவுண்ட்டர்
கே.வி.குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டது.
கே.வி.குப்பம்
மின் கட்டணம் செலுத்த, மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து கே.வி.குப்பத்தில் ஆதார் எண் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த சென்ற பயனாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் கே.வி.குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் ஆதார் எண் இணைப்புக்காக புதிய கவுண்ட்டர் திறக்கப்பட்டது.
பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆதார் எண் பதிவு செய்யும் கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் சுமார் 135 பேர் தங்கள் ஆதார் எண்களை மின்அட்டையுடன் இணைத்துக் கொண்டனர்.
இந்த கவுண்ட்டரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உதவி மின் பொறியாளர் ஆ.அருள்சரவணன் தெரிவித்தார்.