முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-03-13 18:46 GMT

 வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல், பவித்திரம் பாலமலை, வெண்ணெய்மலை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்