ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தலைமை விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் - கே.எஸ்.அழகிரிபேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் தேசிய தலைமை விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Update: 2023-01-19 15:58 GMT

சென்னை,

2021 தேர்தலில் வெற்றி பெற்றதால் தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனையின் முடிவில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை திமுக ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சருடனான நடைபெற்ற சந்திப்பு சுமுகமாக இருந்தது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்