கடலூர் சில்வர் பீச்சில் மண் அரிப்பு

கடலூர் சில்வர் பீச்சில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-12 18:45 GMT

கடலூர் மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச் விளங்கி வருகிறது. இந்த சில்வர் பீச் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடல் நீரோட்டத்தில் மாற்றம், அடிக்கடி கடல்சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

சுனாமிக்கு முன்பு கடலை ரசிப்பதற்காக ஆங்காங்கே இருக்கைகள் போடப்பட்டது. கடற்கரை வரை நடைபாதையும் அமைக்கப்பட்டது. இது தவிர பெரிய அளவிலான சிமெண்டு கட்டைகள் கட்டப்பட்டு, அதில் இருந்து பொதுமக்கள் கடலை ரசித்து வந்தனர்.

அந்த சிமெண்டு கட்டைகள் கடல் சீற்றத்தால் உடைந்து கடலுக்குள் சென்று விட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அது இருந்த இடமே தெரியாமல் கடற்கரையோர மணலில் புதையுண்டது. இந்நிலையில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு, ஏற்கனவே உடைந்து கிடந்த சிமெண்டு கட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது.

இதனால் இதை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். அடிக்கடி கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்களும் அச்சமடைந்துள்ளனர். கடற்கரையோரம் இருந்த தங்கள் படகுகளை சற்று தொலைவில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்