சிவகாசி பெரியகுளம் கண்மாய் மியாவாக்கி காட்டில் குவியும் பறவைகள்
சிவகாசி பெரியகுளம் கண்மாய் மியாவாக்கி காட்டில் பறவைகள் குவிகின்றன.
சிவகாசி,
சிவகாசி பெரியகுளம் கண்மாய் மியாவாக்கி காட்டில் பறவைகள் குவிகின்றன.
பெரியகுளம் கண்மாய்
சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கடந்த 2020-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பசுமை மன்றம் சார்பில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மியாவாக்கி காடு நன்கு வளர்ந்து பறவைகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. தற்போது கடுமையான கோடை காலம் என்பதால் பறவைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் பெரியகுளம் கண்மாயில் கிடைக்கிறது.
ரெட்டைவால் குருவி
இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பறவைகள் இந்த மியாவாக்கி காட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளது. மியாவாக்கி காட்டின் அருகில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வறண்டு காணப்படும் நிலையில் அதில் உள்ள மீன்கள் இந்த பறவைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.
தற்போது இங்கு வர்ணம் பூசப்பட்ட நாரை, நெற்பறவை, காட்டு வாத்து, ரெட்டைவால் குருவி, வெள்ளை மார்பக கிங்பிஷர் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் அதிக அளவில் வந்து செல்கிறது.
பறவைகளின் இருப்பிடம்
இதுகுறித்து பறவை ஆர்வலர் அரவிந்த் கூறியதாவது, வர்ணம் பூசப்பட்ட நாரை வகை பறவை உலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் காணப்படுகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த வகை பறவைகள் அதிக அளவில் அழிந்து வருகிறது.
வேறு எங்கும் காண முடியாத இந்த வகை பறவை சிவகாசி பெரியகுளத்தில் காணமுடிகிறது. இந்த மியாவாக்கி காட்டிற்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கிறது. எனவே அடுத்து வரும் காலங்களில் இந்த மியாவாக்கி காட்டினை பறவைகளின் இருப்பிடமாக மாற்றி அமைத்து அவைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.