அரசு மகளிர் கலை கல்லூரியில்-தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரசு மகளிர் கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடந்த தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-19 18:45 GMT


அரசு மகளிர் கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடந்த தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் வரவேற்று பேசினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் நெறி கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு துறைகளை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு கருத்தரங்கமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவிகள் தங்களது கல்லூரி படிப்பை முடித்தவுடன் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அடித்தளமாகவும், உதவிகரமாகவும் அமையும்.

பயன்பெற வேண்டும்

மேலும், மாணவிகள் தங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை நோக்கி தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படையாகவும், உறுதுணையாகவும் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற கருத்தரங்குகளையும், அதன் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களையும் உள்வாங்கி, தங்களது எதிர்காலத்திற்கு அடிப்படையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை, கலெக்டர் வெளியிட, அதனை அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் கண்ணன் பெற்றுக்கொண்டார். மேலும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்