தமிழ்நாடு அணியில் காரைக்குடி மாணவர்கள் தேர்வு
தமிழ்நாடு அணியில் காரைக்குடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
காரைக்குடி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தேசிய மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 17-ந் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்கு பெறுகின்றன. முன்னதாக கோவையில் நடைபெற்ற மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வு பெற்ற காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 2-ம் ஆண்டு மாணவர்கள் பாலகணேஷ் மற்றும் சிவபாலன் ஆகிய இருவரும் உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக விளையாட உள்ளனர். இவர்களை அழகப்பா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தரும் கல்லூரியின் கல்வி ஆலோசகருமான சுப்பையா பாராட்டினார்.