8 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறிய 8 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதிகளை மீறி பயணிகள் ஆட்டோக்களின் உதிரிபாகத்தை மாற்றி சரக்கு வாகனமாக பயன்படுத்தி சரக்கு ஏற்றி செல்வதை அதிகாரிகள் பார்த்தனர். இதை தொடர்ந்து 6 சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது வாகனங்களை பதிவு செய்யாமலும், வரி செலுத்தாமலும், ஆபத்தான முறையிலும் இயக்குவது தெரியவந்தது. இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தகுதி சான்று புதுப்பிக்காத 2 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.