சீமான் பெயருக்கு களங்கம்-விஜயலட்சுமியை கைது செய்ய வேண்டும்- நாம் தமிழர் கட்சியினர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சீமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஜயலட்சுமியை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் அவர் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சீமான் பெயருக்கு நடிகை விஜயலட்சுமி களங்கம் விளைவித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண்ஜெயசீலன் தலைமையில் நிர்வாகிகள் விக்னேஸ்வரன், சாராள் உள்ளிட்ட பலர் நேற்று புகார் கொடுத்தனர். அதில் சீமான் மீது புகார்களை கூறி வரும் விஜயலட்சுமியை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கூறப்பட்டிருந்தது.