அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
குமாரபாளையம் அருகே ஓசோன் தினத்தையொட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிபாளையம்,
குமாரபாளையம் அருகே வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓசோன் தின நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர் குமார் வரவேற்றார். இதையடுத்து ஆசிரியர் அம்சா மாணவர்களுக்கு ஓசோன் படலம் குறித்து விளக்கி கூறினார். பின்னர் மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் பசுமை படை சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியர்கள் முத்துராதா, சுமதி, சந்தான லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.