அரிச்சல்முனை கடல்பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டு

அரிச்சல்முனை கடல்பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-12-04 16:39 GMT

தனுஷ்கோடி, 

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி. தனுஷ்கோடி கடலில் இயற்கையாகவே கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் உள்ள பகுதியாக அடிக்கடி கடல் நீர் அதிகரிப்பதும் திடீரென கடல் நீர் வற்றி மணல் பரப்பாக காட்சியளிக்கும் நிகழ்வும் அடிக்கடி நடைபெறும். கடந்த சில வாரங்களாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சுற்றி மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு காட்சி அளித்து வந்தது. இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சீதோசன நிலை மாற்றத்தால் வடக்கு கடல் பகுதியில் குறிப்பிட்ட இடை வெளியில் கடல் நீர் வற்றி புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகி உள்ளது. அரிச்சல்முனை வரும் சுற்றுலா பயணிகள் இந்த மணல் திட்டை கடற்கரையில் நின்றபடி மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதுபோல் செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் கடல் நீர் ஏறுவதும், கடல் நீர் வற்றி மணல் திட்டு உருவாகும் நிகழ்வும் அதிகமாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்