பலத்த சூறாவளி காற்று- கடல் சீற்றம்

பலத்த சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது.

Update: 2022-08-04 17:50 GMT

கீழக்கரை, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக 4000-த்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதன் இடையே ஏர்வாடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதோடு கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் வனத்துறையின் சார்பில் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின்கீழ் ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்தும் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வாலிநோக்கம் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவுக்கு இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்