பாம்பனில் நிறம்மாறிய கடல்

தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் கடல்நிறம் மாறி காட்சி அளித்து வருகிறது.

Update: 2022-05-19 13:27 GMT

ராமேசுவரம், 

தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் கடல்நிறம் மாறி காட்சி அளித்து வருகிறது.

சூறாவளி காற்று

ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப் படுகிறது.

இந்தநிலையில் பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கரையோரத்தில் உள்ள கடல் பகுதி ஒரு நிறத்திலும் ஆழ்கடல் பகுதி மற்றொரு நிறத்திலும் காட்சி அளித்து வருகின்றது.

கடல் சீற்றம்

இதனை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்து செல்கின்றனர். பாம்பனில் கடல் சீற்றம், கடல் உள்வாங்குதல் என இருந்துவரும் நிலையில் தற்போது நிறம் மாறி கடல்நீர் காட்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்