விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கண்காட்சியினை கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலைய உதவி பேராசிரியர் சுந்தரவேல் தொடங்கி வைத்தார். இதில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 720 மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர் குணசேகரன், செயலாளர் பொறியாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறந்த படைப்புகள் அனைத்திற்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் செய்திருந்தார்.