பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்

தியாகதுருகத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்

Update: 2022-12-24 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் தியாகதுருகம் அருகே கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவா் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்படி இரு மாணவர்களும் சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் அருட்செல்வனிடம் டியூஷன் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று டியூஷன் முடிந்து வீடு திரும்பும் வழியில் 9-ம் வகுப்பு மாணவர், 10-ம் வகுப்பு மாணவரை விளையாட்டாக திட்டி, குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவர் தாக்கியதில் படுகாயம் அடைந்த 9-ம் வகுப்பு மாணவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிக்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து இரு மாணவர்களின் பெற்றோரும் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகாா் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்