பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அஞ்சல்தலை சேகரிப்பதில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-14 17:30 GMT

மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய அஞ்சல்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் பள்ளியில் அஞ்சல்தலை சேகரிக்கும் சங்கத்தில் உறுப்பினராகவோ அல்லது சொந்த அஞ்சல்தலை வைப்புக் கணக்கு வைத்திருக்கும் 6-ம் முதல் 11-ம் வகுப்பு வரை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர் உதவித்தொகை பெற தகுதி பெறுவர். சமீபத்திய இறுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். அஞ்சல்தலை தொடர்பான எழுத்து வினாடி-வினா வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், இறுதி தேர்வுக்கான அஞ்சல் தலை திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். வினாடி-வினா தேர்வு 50 கேள்விகளை கொண்டிருக்கும். செயல்முறையில் மாணவர்கள் 16 அஞ்சல் தலைகள், 500 வார்த்தைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. விண்ணப்ப படிவத்தை http://www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அஞ்சல் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை அஞ்சல் கோட்டம், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்